பாஜக தேர்தல் அறிக்கை 2026: "தைப்பூசம் மாநில விழாவாக அறிவிக்கப்படும்" - பா.ஜ.க.வின் அதிரடி வாக்குறுதி!
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த முக்கிய வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த முக்கிய வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளது.
அதன்படி, முருகப் பெருமானின் பெருமையைப் போற்றும் விதமாக, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம் என பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
தமிழகத்தின் அறுபடை வீடுகள் மற்றும் முருகன் ஆலயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் தைப்பூச விழாவிற்கு அரசு ரீதியான முக்கியத்துவத்தை அளிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தைப்பூசத்திற்கு அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மாநில விழாவாகக் கொண்டாடுவது குறித்த இந்த வாக்குறுதி ஆன்மீகப் பெரியவர்கள் மற்றும் பக்தர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.