TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..! சென்னையில் டீசல் லிட்டர் ரூ.100-ஐ தாண்டியது!

Share This Article:

சென்னையில் இன்று (ஜூலை 13) பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.69 மற்றும் டீசல் ரூ.1.71 உயர்ந்துள்ளது. இதனால் டீசல் விலை மீண்டும் லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டி ரூ.101.26 ஆக உயர்ந்துள்ளது.

மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..! சென்னையில் டீசல் லிட்டர் ரூ.100-ஐ தாண்டியது!

சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இன்று (ஜூலை 13) பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டீசல் விலை மீண்டும் ரூ.100-ஐ தாண்டியிருப்பது பொதுமக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, உலகளாவிய அரசியல் சூழல் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.

Content image

கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கில் நிலவிய பதற்றம் சற்று குறைந்ததையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருந்தன. குறிப்பாக, ஈரான்–அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை ஓரளவு கட்டுக்குள் வைத்திருந்தது.

ஆனால், சமீபத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்களால், மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக இந்தியாவிலும் எரிபொருள் விலையில் உயர்வு பதிவாகியுள்ளது.

இன்றைய (ஜூலை 13) விலை நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69 உயர்ந்து ரூ.109.45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.71 உயர்ந்து ரூ.101.26 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Content image

டீசல் விலை மீண்டும் ரூ.100-ஐ கடந்துள்ளதால், சரக்கு வாகன உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தினசரி போக்குவரத்தை நம்பியுள்ள பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். டீசல் விலை உயர்வு காரணமாக சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் தாக்கம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை நிலவரத்தைப் பொறுத்தே அமையும். மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் சர்வதேச எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து, வரும் நாட்களிலும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions