TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

லஞ்சம் கேட்டால் உடனே புகார் அளியுங்கள்: தமிழ்நாடு அரசு புதிய WhatsApp எண்ணை அறிவிப்பு!

Share This Article:

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், 9498180936 என்ற WhatsApp எண்ணில் புகார் அளிக்கலாம் என ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) அறிவித்துள்ளது. மின்னஞ்சல் மற்றும் நேரடி முறையிலும் புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் கேட்டால் உடனே புகார் அளியுங்கள்: தமிழ்நாடு அரசு புதிய WhatsApp எண்ணை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பது தொடர்பாக பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்கும் வகையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) புதிய WhatsApp புகார் எண்ணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால், 9498180936 என்ற WhatsApp எண்ணுக்கு தகவல் மற்றும் ஆதாரங்களுடன் புகார் அனுப்பலாம். இந்த WhatsApp எண்ணை அனைத்து அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் கட்டாயமாக காட்சிப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

Content image

மேலும், dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் DVAC-ன் தொலைபேசி எண்கள் மூலமாகவும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அதேபோல், சென்னை ஆலந்தூரில் அமைந்துள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ புகார் சமர்ப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனுடன், "லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்" என்ற விழிப்புணர்வு அறிவிப்புப் பலகையை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்றும், இதை அனைத்து துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

Content image

இந்த நடவடிக்கைகள் மூலம் ஊழலை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்கும் சூழலை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு முக்கிய முயற்சி மேற்கொண்டுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions