முதல்வர் விஜயின் ‘ஜனநாயகன்’ ஜூலை 23-ல் ரிலீஸ்: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
முதல்வரும் நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தாமதமான சென்சார் நடைமுறைகளுக்குப் பிறகு படம் ‘A’ சான்றிதழ் பெற்றுள்ளது.
முதல்வரும் நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த திரைப்படம் ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
முதலில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் தொடர்பான வழக்கு மற்றும் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை.
பின்னர், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு கடந்த வாரம் ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து, படத்தின் புதிய வெளியீட்டு தேதியாக ஜூலை 23 அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பெரும் உற்சாகம் நிலவுகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.