TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சிவகங்கை மாணவர் கத்திக்குத்து சம்பவம்: “அமைச்சர் ராஜ்மோகனின் நிர்வாகத் தோல்வி” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Share This Article:

சிவகங்கை ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர் சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனின் நிர்வாகத் தோல்விக்கான சான்று என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சிவகங்கை மாணவர் கத்திக்குத்து சம்பவம்: “அமைச்சர் ராஜ்மோகனின் நிர்வாகத் தோல்வி” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர், வகுப்பறையிலேயே சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Content image

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில், அரசுப் பள்ளிகளில் ஆயுதக் கலாச்சாரம் பரவுவது மிகுந்த கவலைக்குரியது என்றும், சிவகங்கை சம்பவத்துடன் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரசுப் பள்ளி மாணவர் மண்வெட்டியால் தாக்கப்பட்ட மற்றொரு சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார்.

அறநெறிகளை கற்பிக்க வேண்டிய பள்ளிகளில் மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது என்றும், குறிப்பாக அரசின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனின் நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

Content image

மேலும், தனியார் பள்ளிகளின் நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், விளிம்புநிலை மக்களின் நம்பிக்கையாக உள்ள அரசுப் பள்ளிகளின் பாதுகாப்பு மற்றும் மாணவர் நலனிலும் அமைச்சர் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அரசுப் பள்ளிகளில் Conflict Management, Adaptability போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மாணவர்களுக்கு கட்டாயமாக நடத்த வேண்டும் என்றும், மாணவர்களிடையே ஏற்படும் கோபம், மோதல் மற்றும் மனஅழுத்தங்களை சரியாக கையாள்வது குறித்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions