TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

திருமணமான ஒரே வாரத்தில் மனைவி கௌரிக்கு ரூ.100 கோடி பரிசு? ஆமீர் கான் குறித்து வெளியான தகவல்!

Share This Article:

நடிகர் ஆமீர் கான் தனது மூன்றாவது திருமணத்திற்குப் பிறகு, மனைவி கௌரி ஸ்ப்ராட்டுக்கு ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஆடம்பர குடியிருப்பை பரிசாக வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வீடு முழு குடும்பமும் ஒன்றாக வசிக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.

திருமணமான ஒரே வாரத்தில் மனைவி கௌரிக்கு ரூ.100 கோடி பரிசு? ஆமீர் கான் குறித்து வெளியான தகவல்!

பாலிவுட் நடிகர் ஆமீர் கான், தனது நீண்டநாள் தோழியான கௌரி ஸ்ப்ராட்-ஐ சமீபத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த திருமணம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றாலும், நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியது.

திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில், கௌரிக்கு ஆமீர் கான் வழங்கியிருப்பதாகக் கூறப்படும் விலையுயர்ந்த பரிசு தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. தகவல்களின்படி, மும்பை யூனியன் பார்க் பகுதியில் உள்ள மெரினா அபார்ட்மென்ட்ஸ் வளாகத்தில் ரூ.100 கோடிக்கும் அதிக முதலீட்டில் கட்டப்பட்டு வரும் ஆடம்பர குடியிருப்பே அவரது முதல் திருமணப் பரிசாக இருக்கும் என கூறப்படுகிறது.

Content image

இந்த புதிய குடியிருப்பில் ஆமீர் கான் மற்றும் கௌரி மட்டும் அல்லாமல், இருவரது குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக வசிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு, ஆமீர், கௌரி மற்றும் அவரது மகன் குவின் ஆகியோர் மேல்தளத்தில் அமைக்கப்படும் ஸ்கை வில்லாவில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது.

Content image

மேலும், ஆமீர் கானின் மூத்த மகன் ஜுனைத்-க்கு ஒரு தளம், முன்னாள் மனைவி கிரண் ராவ் மற்றும் அவர்களின் மகன் ஆசாத்-க்கு மற்றொரு தளம், அதேபோல் ஆமீரின் தாயார் மற்றும் இரண்டு சகோதரிகளுக்கும் தனித்தனி குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Content image

ஆமீர் கான் இதற்கு முன்பு ரீனா தத்தா மற்றும் பின்னர் இயக்குநர் கிரண் ராவ் ஆகியோரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்திருந்தார். தனது பிறந்தநாளில் கௌரி ஸ்ப்ராட்டுடன் நீண்டகால உறவில் இருப்பதை வெளிப்படுத்திய அவர், பின்னர் ஜூலை 5-ஆம் தேதி சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் கௌரியை திருமணம் செய்து கொண்டார்.


( குறிப்பு: ரூ.100 கோடி மதிப்பிலான குடியிருப்பை திருமணப் பரிசாக வழங்கியதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இவை பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் பரவி வருகின்றன. )

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions