TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

45 வயதில் Fat to Fit ஆன நமீதா! இரட்டை குழந்தைகளின் தாயான பிறகும் அசத்தும் ஃபிட்னெஸ் சீக்ரெட்டை பகிர்ந்த நடிகை!

Share This Article:

45 வயதில் இரட்டை குழந்தைகளின் தாயான நடிகை நமீதா, தொடர்ந்து உடற்பயிற்சி, சுயக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையால் 'Fat to Fit' மாற்றத்தை சாதித்துள்ளார். தனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

45 வயதில் Fat to Fit ஆன நமீதா! இரட்டை குழந்தைகளின் தாயான பிறகும் அசத்தும் ஃபிட்னெஸ் சீக்ரெட்டை பகிர்ந்த நடிகை!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த நடிகை நமீதா, தற்போது தனது அசத்தலான உடல் மாற்றத்தால் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். 45 வயதிலும், நான்கு வயதுடைய இரட்டை ஆண் குழந்தைகளின் தாயாக இருந்தும், உடலை மீண்டும் கட்டுக்கோப்பாக மாற்றி 'Fat to Fit' பயணத்தில் வெற்றி கண்டுள்ளார். தனது இந்த மாற்றத்திற்கு காரணமான வாழ்க்கை முறை மற்றும் ஃபிட்னெஸ் ரகசியங்களை சமீபத்திய சமூக வலைதள பதிவில் அவர் பகிர்ந்துள்ளார்.

நமீதா கடந்த 2004-ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் சரத்குமார், சத்யராஜ், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்தார். 'ஏய்', 'இங்க்லீஷ்காரன்', 'கோவை பிரதர்ஸ்', 'பில்லா', 'அழகிய தமிழ் மகன்', 'ஜகன்மோகினி' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.தற்போது திரைப்படங்களில் இருந்து விலகி அரசியலில் முழுநேரமாக செயல்பட்டு வரும் நமீதா, உடல்நலத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்திற்குப் பிறகு மற்றும் இரட்டை குழந்தைகளுக்கு தாயான பிறகு உடல் எடை அதிகரித்திருந்த நிலையில், மீண்டும் பழைய உடல் அமைப்பை அடைய அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளன.

Content image

சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்த நமீதா, "உங்கள் மனம் எதை நம்புகிறதோ, அதையே உங்கள் உடலும் பின்பற்றுகிறது" என்ற வரிகளுடன் தனது ஃபிட்னெஸ் பயணத்தை விவரித்துள்ளார்.

தனது எடை குறைப்பின் உண்மையான ரகசியம் குறித்து அவர் கூறியதாவது, "எந்த சாக்குப்போக்கும் சொல்லாமல், சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பதே முக்கியம். ஒவ்வொரு உடற்பயிற்சியும் நான் எனக்கே கொடுத்த வாக்குறுதி. மோட்டிவேஷன் சில நாட்கள்தான் நீடிக்கும். ஆனால் ஒழுக்கத்துடன் தினமும் பயிற்சி செய்தால் மட்டுமே நிரந்தரமான மாற்றத்தை பார்க்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உடல் மாற்றத்திற்கு முன்பாக மனநிலையில் மாற்றம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். "முதலில் மனம் முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகுதான் உடல் மாறும். நான் எடை குறைக்க எந்த குறுக்கு வழியையும் தேர்வு செய்யவில்லை. மாயாஜாலமும் இல்லை. தொடர்ந்து வியர்வை சிந்தினேன், பொறுமையாக இருந்தேன். அதுவே எனது வெற்றியின் ரகசியம்" என்று நமீதா கூறியுள்ளார்.

Content image

ஃபிட்னெஸ் பயணத்தில் மற்றவர்களுடன் தன்னை ஒப்பிடுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். "நேற்றைய என்னைவிட இன்று நான் வலிமையாக இருக்கிறேனா என்பதைத்தான் நான் பார்க்கிறேன். எந்தவொரு வெற்றியும் ஒரே நாளில் கிடைக்காது. ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் சிறிய முயற்சிகள்தான் பின்னர் பெரிய பலனாக மாறுகின்றன. அந்தத் தொடர்ச்சியை மட்டும் கைவிடக்கூடாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜிம்மிற்கு செல்வதன் மீதான தனது பார்வையும் காலப்போக்கில் மாறிவிட்டதாக நமீதா கூறுகிறார். ஆரம்பத்தில் உடல் எடையை குறைத்து ஃபிட்டாக வேண்டும் என்பதற்காக ஜிம்மிற்கு சென்ற அவர், தற்போது மன வலிமை, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்காகவே தினமும் பயிற்சி மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அவரது வார்த்தைகளில், "இப்போது நான் உடலை அழகாக வைத்துக்கொள்ள மட்டுமல்ல, மனதளவில் வலிமையாகவும், ஒழுக்கமுள்ள மனிதராகவும் இருக்க ஜிம்மிற்கு செல்கிறேன். சில பயிற்சிகள் ஒரே நேரத்தில் வலிமையையும் சகிப்புத்தன்மையையும் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு பயிற்சிக்குப் பிறகும் ஒரு தடகள வீராங்கனையைப் போல உணர்கிறேன்" என்று பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.

Content image

நமீதாவின் இந்த மாற்றம், வயது என்பது உடல்நலத்தை மேம்படுத்துவதற்கு ஒருபோதும் தடையல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. சரியான உணவுமுறை, ஒழுங்கான உடற்பயிற்சி, மன உறுதி, பொறுமை மற்றும் தொடர்ச்சியான முயற்சி இருந்தால் எந்த வயதிலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்க முடியும் என்பதற்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

இன்று சமூக வலைதளங்களில் நமீதாவின் ஃபிட்னெஸ் பயணம் பலருக்கும் உத்வேகமாக மாறியுள்ளது. குறிப்பாக குழந்தைகள் பிறந்த பிறகு உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் பெண்களுக்கு, "மோட்டிவேஷனை விட ஒழுக்கமே வெற்றியின் அடித்தளம்" என்ற அவரது கருத்து மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions