TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"பேப்பர் படிங்க..." என்ற விஜய்... "விவசாயிகளை சந்திங்க!" என பதிலடி கொடுத்த உதயநிதி – பேரவையில் காவிரி விவகாரத்தில் காரசார மோதல்

Share This Article:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது மற்றும் காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே கடும் வார்த்தைப் போராட்டம் நடைபெற்றது. "பேப்பர் படிங்க" என்ற விஜயின் கருத்துக்கு, "விவசாயிகளை சந்திக்கணும்" என உதயநிதி பதிலடி கொடுத்தது பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

"பேப்பர் படிங்க..." என்ற விஜய்... "விவசாயிகளை சந்திங்க!" என பதிலடி கொடுத்த உதயநிதி – பேரவையில் காவிரி விவகாரத்தில் காரசார மோதல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவிரி நீர்ப் பிரச்சினை மற்றும் கர்நாடகாவின் மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டை வலியுறுத்தியதுடன், ஒருவரின் கருத்துக்கு மற்றொருவர் நேரடியாக பதிலளித்ததால் அவை அரங்கில் பரபரப்பான சூழல் நிலவியது.

தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், காவிரி விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதற்கான எண்ணம் தங்கள் அரசுக்கு இல்லை என்று தெளிவுபடுத்தினார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும், சட்ட ரீதியாகவே இந்த விவகாரத்தை அணுக அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

Content image

மேலும், மேகதாது தொடர்பாக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பியதையும், மத்திய அரசு முழுமையான தகவல்களை வெளியிடாததால் அடுத்த நாளே பிரதமருக்கு கடிதம் எழுதி அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெங்களூருக்கு சென்று கர்நாடக அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தது குறித்தும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார். அண்டை மாநிலத்துடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற நம்பிக்கையில்தான் அந்த முயற்சியை மேற்கொண்டதாகவும், அதில் தனிப்பட்ட அவமானம் ஏற்பட்டாலும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அதை ஏற்கத் தயார் என்றும் தெரிவித்தார்.

"பகை நாடுகளுக்குக் கூட பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்கிறார்கள். அப்படியிருக்க அண்டை மாநிலத்துடன் பேசிப் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்பதில் தவறு இல்லை" என்று கூறிய அவர், காவிரி விவகாரத்தை மிகுந்த கவனத்துடனும் சட்டப்பூர்வமான முறையிலும் அரசு கையாளும் என்ற உறுதியையும் மீண்டும் தெரிவித்தார்.

Content image

அதன்பின் குறுவை சாகுபடி தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், குறுவை சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து, "அரசியலை நாங்கள்தான் அறிவோம் என்று சொல்பவர்களுக்கு இது கூட தெரியவில்லை. முன்னும் பின்னும் பேப்பர் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரிந்திருக்கும்" என்று விமர்சித்தார். இந்தக் கருத்து அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு உடனடியாக பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசு வழங்கியிருப்பது குறுவை சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பே தவிர, தற்போது விவசாயிகள் கோருவது வறட்சி நிவாரண நிதி என்று சுட்டிக்காட்டினார். "இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு தினமும் காலை பேப்பர் படித்தால் மட்டும் போதாது. விவசாயிகளையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் நேரில் சந்தித்து அவர்களது கருத்தைக் கேட்க வேண்டும்" என்று பதிலடி கொடுத்தார்.

Content image

மேலும், காவிரி மற்றும் வறட்சி தொடர்பான பிரச்சினையில் அனைத்து கட்சிகளின் கருத்தையும் கேட்கும் வகையில் அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த தயங்குவது ஏன் என்ற கேள்வியையும் உதயநிதி எழுப்பினார். இது ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே மேலும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அவை முன்னவர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். வறட்சி பாதிப்பு தொடர்பான முழுமையான கணக்கெடுப்பு செப்டம்பர் மாதத்திற்கு பின்னரே மேற்கொள்ளப்படும் என்றும், அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

காவிரி நீர்ப் பகிர்வு, மேகதாது அணைத் திட்டம், விவசாயிகளுக்கான நிவாரணம் போன்ற முக்கியமான விவகாரங்கள் குறித்து நடைபெற்ற இந்த விவாதம், அரசியல் ரீதியாகவும் பொதுமக்கள் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக "பேப்பர் படிங்க" என்ற முதலமைச்சர் விஜயின் கருத்துக்கும், "விவசாயிகளை சந்திங்க" என்ற உதயநிதி ஸ்டாலினின் பதிலடிக்கும் சட்டப்பேரவையில் பெரும் கவனம் கிடைத்தது. இந்த வார்த்தைப் போர் தமிழ்நாடு அரசியலில் புதிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions