TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

Share This Article:

தமிழ்நாடு சட்டசபையில் நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.289-ம், பொது ரக நெல்லுக்கு ரூ.150-ம் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதுடன், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு: சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில் நெல் மற்றும் கரும்பு கொள்முதல் தொடர்பான முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ் நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை குறித்து முதலமைச்சர் விஜய் கூறியதாவது:

விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கில் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.289-ம், பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.150-ம் உயர்த்தி வழங்கப்படும்.

Content image

இதன் மூலம் விவசாயிகளுக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கூடுதல் ஊக்கத்தொகையும் கிடைக்கும். சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750-ம், பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600-ம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதேபோல், சர்க்கரை ஆலைகளில் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் தொகையுடன் கூடுதலாக தமிழக அரசு சார்பிலும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கரும்புக்கான ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.709.50 வழங்கப்படும். இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 விலையாக கிடைக்கும்.

Content image

நெல்லுக்கு ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டார். மேலும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 விலையாக கிடைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.கரும்பு டன் 134-க்கு மேல் வழங்குவதற்கும் இதுதான் முதல் முறையாகும் என்றும் முதலமைச்சர் கூறினார். நமது அரசு விவசாயிகளை விட்டுவிடாமல் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.இந்த அறிவிப்பு நெல் மற்றும் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions