TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் – முதலமைச்சர் விஜய் வழங்கினார்

Share This Article:

போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை தடுப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் 2026ஆம் ஆண்டிற்கான காவல் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் – முதலமைச்சர் விஜய் வழங்கினார்

சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் விஜய் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 2,000 மாணவர்கள் நேரிலும், தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காணொலி வாயிலாகவும் பங்கேற்று போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை தடுப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் பணியாளர்களுக்கு 2026ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்களை முதலமைச்சர் விஜய் வழங்கி கவுரவித்தார். 

Content image

மேலும், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி, கல்லூரிகளின் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வலர் குழுக்களுக்கும் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் பணியும் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் காணொலி வாயிலாக பார்வையிட்டார். 

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions