கே.ஒய்.சி. கட்டாயம்.. இதை செய்யாவிட்டால் மானிய விலையில் சிலிண்டர் பெற முடியாது! காலக்கெடு விதிப்பு
KYC செய்யலையா? மானிய விலையில் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்! 15 நாட்களுக்குள் KYC முடிக்க வேண்டும் என அறிவிப்பு.
மத்திய அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான கே.ஒய்.சி. நடைமுறையில் வாடிக்கையாளர்களின் மின்னணு முறையில் இணைக்க காலக்கெடு விதித்துள்ளது.
இந்த நடைமுறையின் மூலம் ஒரே முகவரியில் இருக்கும் போலி மற்றும் கூடுதல் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை நீக்குவதே முக்கிய நோக்கமாகும்.
மேலும், மானிய விலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களை, உணவகங்கள், ஓட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடு – 15 நாட்களுக்குள்
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அடிப்படையிலான மின்னணு கே.ஒய்.சி. சரிபார்ப்பை முடிப்பதற்கான இறுதிக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கெடுவுக்குள் சரிபார்ப்பை நிறைவு செய்யாத வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் வினியோகம் ரத்து...
கே.ஒய்.சி. இணைக்கப்படாத பட்சத்தில் மானிய விலையில் சிலிண்டர் வழங்கும் தகுதி பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது கே.ஒய்.சி. விவரங்களை உடனடியாக சரிபார்த்து இணைப்பை நிறைவு செய்வது அவசியமாகியுள்ளது.
அதற்கான வழிமுறை...

0 Comments
No comments yet. Be the first to comment.