TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கிருஷ்ணகிரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

Share This Article:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமி

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபர்களை கைது செய்ய போலீசார் 3 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மலைக்கிராமத்தைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவியான சிறுமி, கடந்த புதன்கிழமை மாலை பள்ளி முடிந்து மற்ற குழந்தைகளுடன் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். மற்ற குழந்தைகள் தங்களது வீடுகளுக்குச் சென்ற பின்னர், சிறுமி மட்டும் தனியாக வீட்டிற்கு திரும்பியுள்ளார்.அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு திரும்பிய சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இதையடுத்து உறவினர்கள் குழந்தைகளுக்கான உதவி எண் 1098-க்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சிறுமி 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Content image

3 தனிப்படைகள் அமைத்து விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதற்காக 3 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions