TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

போதைப்பொருள் பழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது..? - சட்டசபையில் காரசார விவாதம்

Share This Article:

தமிழக சட்டசபையில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. கடந்த ஆட்சிகளை ஒப்பிட்டு உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துகளால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

போதைப்பொருள் பழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது..? - சட்டசபையில் காரசார விவாதம்

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தொடரில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதனைத் தடுப்பதற்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது.

கேள்வி நேரத்தின்போது பேசிய உறுப்பினர்கள், தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்தும், அதனை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்

திமுக உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்தில் ஏராளமான கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறினார். கோவையில் கல்லூரி மாணவர் அழகன் அழித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், போதைப்பொருள் குறித்து தகவல் தெரிவிப்பதன் மூலம் கொலை நடைபெற்றதாகவும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோவை மாணவர் அழகன் கொலை தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார். போதைப்பொருள் குறித்து புகார் அளித்ததற்காகவே அந்த மாணவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தமிழகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் தொடர்பான சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Content image

பாயும் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்

பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசுகையில், கோவை மாணவர் கொலை வழக்கில் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பள்ளி மாணவர்களுக்கும் போதைப்பொருள் எளிதாக கிடைக்கும் நிலை காணப்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்து, தற்போதைய ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்வதாகக் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் விவகாரத்தில் காரசார விவாதம்

இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கருத்து மோதல் ஏற்பட்டது. தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

சட்டசபையில் நடைபெற்ற இந்த விவாதம், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவகாரங்களை மீண்டும் அரசியல் விவாதத்தின் மையத்திற்கு கொண்டு வந்துள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions