தமிழகத்தில் ரூ.500 கோடியில் நீர்நிலைகள் புனரமைப்பு; அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழகத்தில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் புனரமைக்கும் பணிகளை அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் நீர்நிலைகளை புனரமைக்கும் வகையில் ரூ.500 கோடி மதிப்பீட்டிலான பணிகளை அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (17.08.2026) திருச்சி, வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (VB-GRAMG) கீழ், தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகள் என ரூ.500 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மழைநீரை முறையாக சேமித்து, நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு நீர்வளத்தை பாதுகாக்கவும் இப்பணிகள் முக்கிய பங்காற்றும்.
அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார்
இதன் ஒரு பகுதியாக, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள புத்தேரி கிராம ஏரி வரத்துக் கால்வாயில் ரூ.3.19 கோடி மதிப்பீட்டிலான புனரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் நீர்நிலைகளை பாதுகாத்து, நீர்வளத்தை மேம்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சக்கரபாணி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன், ஐ.ஏ.எஸ்., செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற பின்னர் நீர்நிலைகளின் நீர் சேமிப்பு திறன் அதிகரிப்பதுடன், விவசாயத்திற்கும் பொதுமக்களின் நீர்த் தேவைகளுக்கும் கூடுதல் பயன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.