நடிகை திவிஷா தற்கொலை வழக்கு; கணவர், மாமியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
நடிகை திவிஷா தற்கொலை வழக்கில் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது
மாடல் அழகியும், நடிகையுமான திவிஷாவுக்கும், மத்தியபிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங்குக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு திவிஷா தனது கணவர் குடும்பத்துடன் போபாலில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த மே 12-ந்தேதி கணவர் வீட்டில் திவிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.திவிஷாவின் குடும்பத்தினர் அளித்த புகாரில், திருமணத்துக்குப் பிறகு அவரது புகுந்த வீட்டினர் கூடுதல் வரதட்சணை கேட்டு திவிஷாவை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், தொடர்ந்து ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகளால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் திவிஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் அவரது தாயார் கிரிபாலா சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கிரிபாலா சிங் முன்னாள் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. தற்கொலைக்கு முன்பு நடந்த சம்பவங்கள், குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் வரதட்சணை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், போபாலில் உள்ள தனிக் கோர்ட்டில் சமர்த் சிங் மற்றும் கிரிபாலா சிங் ஆகியோர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த நடவடிக்கை வழக்கில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது

0 Comments
No comments yet. Be the first to comment.