TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சூதாட்ட செயலி விளம்பர வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆன்லைன் பிரபலங்கள் ஆஜர்

Share This Article:

சூதாட்ட செயலி விளம்பர வழக்கில் அதிரடி விசாரணை! 21 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை நிதி அகர்வாலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூதாட்ட செயலி விளம்பர வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆன்லைன் பிரபலங்கள் ஆஜர்

சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக கூறப்படும் வழக்கில், விசாரணைக்காக நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட பிரபலங்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

21 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு

சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக கூறி இதுவரை 21 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, பிரணிதா உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் காவல்துறை அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Content image

தொழிலதிபர் அளித்த புகார்

கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலம் மியாபூர் காவல் நிலையத்தில் 32 வயதான தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கியதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் மூலம் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தி பொதுமக்களை ஈர்த்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் பணத்தை இழப்பதாக புகார்

சமூக வலைதள பிரபலங்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் மூலம் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் விளம்பரப்படுத்தப்படுவதால், இளைஞர்கள் அதிக அளவில் அதில் ஈடுபட்டு பணத்தை இழப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

1867ஆம் ஆண்டின் Public Gambling Act உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

நிதி அகர்வாலிடம் விசாரணை

இந்த நிலையில், சூதாட்ட செயலி விளம்பர வழக்கு தொடர்பாக நடிகை நிதி அகர்வால் ஜிஆர்ஏடி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions