TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

Share This Article:

தென்னிந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி 94 வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

சென்னை: தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவரான சௌகார் ஜானகி 94 வயதில் காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் அவர் உயிரிழந்தார்.

நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்ட தகவலின்படி, சௌகார் ஜானகி இன்று பிற்பகல் 1:59 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்

1950ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சவுக்காரு’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சௌகார் ஜானகி. அந்த திரைப்படத்தின் பெயரே பின்னர் அவரது பெயருடன் இணைந்து ‘சௌகார் ஜானகி’ என பிரபலமானது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், ஏழு தசாப்தங்களுக்கும் மேலான தனது திரைப்பயணத்தில் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

Content image

பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள்

சினிமா மற்றும் கலைத்துறையில் சௌகார் ஜானகி ஆற்றிய பங்களிப்பை பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. நந்தி விருதுகள், கலைமாமணி உள்ளிட்ட விருதுகளுடன், 2022ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

திரையுலகம் இரங்கல்

சௌகார் ஜானகியின் மறைவு செய்தி வெளியானதை தொடர்ந்து திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையின் டெய்னாம்பேட் பகுதியில் மாலை 5 மணி முதல் வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சௌகார் ஜானகியின் மறைவு, தென்னிந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions