TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"எனது வாழ்க்கையின் பெரிய தூண் அம்மாதான்" - நேர்காணலில் உருகிய ஜேசன் சஞ்சய்!

Share This Article:

'சிக்மா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய், தனது குடும்பம், அம்மா மற்றும் படம் குறித்தான பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

"எனது வாழ்க்கையின் பெரிய தூண் அம்மாதான்" - நேர்காணலில் உருகிய ஜேசன் சஞ்சய்!

தமிழக முதல்-அமைச்சரும், முன்னணி நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், முதன்முறையாக இயக்குநராகத் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறார். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ என்ற அதிரடித் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளன.

கனடாவில் உள்ள டொராண்டோ ஃபிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படிப்பை முடித்த ஜேசன் சஞ்சய், தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பையும் முடித்துள்ளார். ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கி அனுபவம் பெற்றுள்ள இவர், தற்போது 'சிக்மா' படத்தின் மூலம் முழு நீளப் படத்தின் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படம் குறித்த அப்டேட் மற்றும் குடும்பம் பற்றிய நெகிழ்ச்சி: தற்போது 'சிக்மா' படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இயக்குநர் ஜேசன் சஞ்சய், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது குடும்பம் மற்றும் அம்மா குறித்து நெகிழ்ச்சியான பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

Content image

அவர் பேசுகையில், "எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் எனது அம்மாதான். 24 மணி நேரமும் என்னைப் பற்றியும், எனது சகோதரியைப் பற்றியுமே அம்மா சிந்தித்துக் கொண்டிருப்பார். நான் ஒரு நாள் அவருக்கு போன் செய்ய மறந்துவிட்டால் கூட, அவரே எனக்கு போன் செய்து, 'இன்று என்ன நடந்தது? எப்படி இருக்கிறாய்?' என்று அன்போடு கேட்டுக்கொண்டே இருப்பார்" என்று உருகியுள்ளார். மேலும், அப்பாவை விட அம்மாவிடம்தான் எல்லாவற்றையும் மனம் திறந்து பேச முடியும் என்றும், தனது சகோதரியிடம் எல்லா விஷயங்களையும் பகிர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து ஜேசன் சஞ்சய் சினிமா வாரிசு என்பதால் எழும் எதிர்பார்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், "ஒருபுறம் எனக்கு நிறைய அன்பு கிடைக்கிறது, அதே சமயம் இயல்பாகவே என் மீது பல எதிர்பார்ப்புகளும் உள்ளன. எனவே, நான் நேர்மறையான கருத்துக்களை மட்டுமே எடுத்துக் கொள்வேன். திரையுலகிற்குள் நுழைவது எனக்கு எளிதாக இருந்தது போன்ற எதிர்மறையான கருத்துக்கள் வந்தால், அவற்றைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன்.

மக்கள் படத்தைப் பார்க்கும்போது, அந்தப் படத்தை மட்டுமே பார்ப்பார்கள்; அதன் இயக்குநர் யார் என்பதைப் பற்றி அவர்கள் பேசப்போவதில்லை" என்று முதிர்ச்சியுடன் பதிலளித்துள்ளார். முடிவுக்கு வந்த விவாகரத்து வழக்கு இதற்கிடையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த மனுவை அவர் திரும்பப் பெற்றுள்ளார்.

லண்டனில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரான சங்கீதா, இந்த வழக்கை மேற்கொண்டு தொடர விருப்பமில்லை என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த விவாகரத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions