TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தமிழ்நாட்டில் 10,000 ஏரிகளில் நீர் இல்லை: வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Share This Article:

தமிழ்நாட்டில் பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் இருப்பு கவலைக்கிடமாக உள்ளதாகவும், 10,000-க்கும் மேற்பட்ட ஏரிகளில் போதிய நீர் இல்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் 10,000 ஏரிகளில் நீர் இல்லை: வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் நீர்நிலைகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், 10,000-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பயனளிக்கும் வகையில் தண்ணீர் இல்லை என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு நீர்வளத்துறையின் பராமரிப்பில் மொத்தம் 14,141 நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் 4,208 நீர்நிலைகள், அதாவது 29.25 சதவீதம், முற்றிலும் வறண்டு விட்டதாகவும், மேலும் 5,814 நீர்நிலைகளில் 1 முதல் 25 சதவீதம் வரை மட்டுமே நீர் இருப்பதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார். இதனால், மொத்தத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் போதுமான நீர் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி பாசன மாவட்டங்களில் கடுமையான நிலை

காவிரி பாசன மாவட்டங்களில் நிலைமை மேலும் கவலைக்கிடமாக இருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி, கல்லணைக் கால்வாய் மற்றும் வெண்ணாறு மூலம் நீர் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு கிடப்பதாக கூறியுள்ளார்.

இதன்படி, காவிரி பாசனப் பகுதிகளில் சுமார் 95 சதவீத நீர்நிலைகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆறுகள் மூலம் நீர் பெறாத 27 தனி நீர்நிலைகளில் 26 நீர்நிலைகளும் வறண்டு கிடப்பதாகவும், ஒட்டுமொத்தமாக காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள 764 நீர்நிலைகளில் 720 நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Content image

நிலத்தடி நீர்மட்டமும் சரிவு

காவிரி பாசன மாவட்டங்களில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவு 6.7 டி.எம்.சி. ஆகும். ஆனால் தற்போது வெறும் 0.17 டி.எம்.சி., அதாவது 2.62 சதவீதம் அளவுக்கு மட்டுமே நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததும், மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததும் இந்த நிலைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. இதன் விளைவாக பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் கடுமையாக குறைந்துள்ளது. முன்பு சுமார் 100 அடி ஆழத்துக்குள் கிடைத்த நிலத்தடி நீர் தற்போது 200 அடிக்கும் கீழ் சென்றுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதனால் குறுவை சாகுபடிக்கு நிலத்தடி நீரை நம்பியிருந்த விவசாயிகள் ஆழ்துளைக் கிணறுகளை மேலும் ஆழப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்காக ஒவ்வொரு விவசாயியும் ஒரு லட்சம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறுவை சாகுபடி பரப்பளவு குறைவு

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு சுமார் 6.31 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. ஆனால் நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடி சுமார் 2 லட்சம் ஏக்கர் அளவுக்கே குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகியுள்ளன. இதே நிலை தொடர்ந்தால் சம்பா சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்படும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக சம்பா சாகுபடிக்கான விதைப்பு பணிகள் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் நெல் விதைப்புக்கான பணிகள் போதிய அளவில் தொடங்கவில்லை.

சம்பா சாகுபடிக்கும் சிக்கல்

மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டால்தான் சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ள முடியும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

ஆனால் மேட்டூர் அணையில் சுமார் 85 அடி அளவுக்கு மட்டுமே நீர் இருப்பதால், அணையை திறந்து தொடர்ந்து தண்ணீர் வழங்குவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனால் காவிரி பாசன மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா சாகுபடியின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions