இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் – அபிஜித் திப்கே பாராட்டு
இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த சி.ஜே.பி. நிறுவனர் அபிஜித் திப்கே, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மூன்று தலைவர்களின் நிர்வாகத்தை பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் யார் என்ற கேள்விக்கு சி.ஜே.பி. நிறுவனர் அபிஜித் திப்கே தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் நிர்வாக அணுகுமுறைகளை அவர் பாராட்டியுள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் யார் என கேட்கப்பட்டபோது,அபிஜித் திப்கே இந்த மூன்று தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியதாக அபிஜித் திப்கே குறிப்பிட்டுள்ளார். நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவரை சிறந்த முதலமைச்சர்களில் ஒருவராக அவர் பாராட்டியுள்ளார்.
அதேபோல், கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் வலுவான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.
டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பள்ளிகள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார்.இதன் மூலம் வெவ்வேறு மாநிலங்களில் நிர்வாகம், பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களை தனது பார்வையில் சிறந்த முதலமைச்சர்களாக அபிஜித் திப்கே குறிப்பிட்டுள்ளார்

0 Comments
No comments yet. Be the first to comment.