சட்டசபையில் இடம் மாறி அமர்ந்த முதல்-அமைச்சர் விஜய்
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் வழக்கமான இடத்தை மாற்றி, அமைச்சர் செங்கோட்டையன் அருகில் அமர்ந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நேபாளத்தில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகளை மீட்பது தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்தார்.இந்த நிலையில், மாலையில் சட்டசபைக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகை தந்தார். அப்போது வழக்கமாக அமரும் இடத்தில் அமராமல், அமைச்சர் செங்கோட்டையன் அருகில் முதல்-அமைச்சர் விஜய் அமர்ந்திருந்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.முதல்-அமைச்சர் விஜய் இடம் மாறி அமர்ந்திருந்தது சட்டசபையில் இருந்த உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது. இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

0 Comments
No comments yet. Be the first to comment.