TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

20,000 மடங்கு லாபம்.. ‘அப்செஷன்’ பட சாதனையை முறியடித்த ‘நியூ லாய்’...

Share This Article:

வெறும் ரூ.19,000 பட்ஜெட்டில் உருவான சீன அனிமேஷன் திரைப்படமான ‘நியூ லாய்’, சுமார் ரூ.40 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் குறைந்த பட்ஜெட்டில் அதிக மடங்கு வசூல் செய்த ‘அப்செஷன்’ படத்தின் 666 மடங்கு சாதனையையும் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

20,000 மடங்கு லாபம்.. ‘அப்செஷன்’ பட சாதனையை முறியடித்த ‘நியூ லாய்’...

குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வசூலை குவிக்கும் திரைப்படங்கள் அவ்வப்போது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சீனாவில் வெறும் ரூ.19,000 பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ‘நியூ லாய்’ (Niu Lai) என்ற அனிமேஷன் திரைப்படம் தற்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இப்படம் தனது தயாரிப்புச் செலவை விட சுமார் 20,000 மடங்கு அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத ரசிகர்கள்

சீனாவைச் சேர்ந்த ‘நியூ லாய்’ திரைப்படத்தை Xin Yumeng மற்றும் Sun Lifang ஆகிய இருவர் இணைந்து உருவாக்கியுள்ளனர். மிகவும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்த அனிமேஷன் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சீனாவில் திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியான ஆரம்ப நாட்களில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் 10 நாட்களில் 300-க்கும் குறைவான பார்வையாளர்களே திரைப்படத்தை திரையரங்கில் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் படம் பெரிய அளவில் கவனம் பெறாது என்ற நிலையே ஆரம்பத்தில் காணப்பட்டது.

ஆனால், படத்தின் காட்சியமைப்பு, அனிமேஷன் தரம் மற்றும் குரல் பதிவு உள்ளிட்ட அம்சங்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. சிலர் படத்தை மோசமாக விமர்சித்ததுடன், அதன் அனிமேஷன் தரத்தை கேலி செய்தும் பதிவுகளை வெளியிட்டனர்.

Content image

விமர்சனங்களே விளம்பரமாக மாறியது!

ஆனால், படத்தின் காட்சியமைப்பு, அனிமேஷன் தரம் மற்றும் குரல் பதிவு உள்ளிட்ட அம்சங்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. சிலர் படத்தை மோசமாக விமர்சித்ததுடன், அதன் அனிமேஷன் தரத்தை கேலி செய்தும் பதிவுகளை வெளியிட்டனர்.

எதிர்பாராத விதமாக, இந்த விமர்சனங்களே படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக மாறின. திரைப்படத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் மீம்களாகவும் வைரல் பதிவுகளாகவும் பரவத் தொடங்கின.

“உண்மையிலேயே படம் இவ்வளவு மோசமாக இருக்கிறதா?” என்ற ஆர்வம் ரசிகர்களிடையே உருவானதைத் தொடர்ந்து, பலர் திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கினர். இதன் காரணமாக படத்தின் திரையரங்கு வசூல் திடீரென அதிகரித்தது.

Content image

‘அப்செஷன்’ படத்தின் சாதனை முறியடிப்பு

இதற்கு முன்பு குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, தனது முதலீட்டை விட 666 மடங்கு அதிகமாக வசூலித்த ‘அப்செஷன்’ (Obsession) திரைப்படம் இந்தப் பிரிவில் சாதனை படைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ‘நியூ லாய்’ திரைப்படம் தனது பட்ஜெட்டை விட சுமார் 20,000 மடங்கு வசூல் செய்துள்ளதாக கூறப்படுவதால், குறைந்த பட்ஜெட்டில் அதிக மடங்கு வசூல் என்ற பிரிவில் ‘அப்செஷன்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விமர்சனத்திலிருந்து வெற்றிக்கு!

பொதுவாக திரைப்படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தால் வசூல் பாதிக்கப்படுவது வழக்கம். ஆனால் ‘நியூ லாய்’ திரைப்படத்தைப் பொறுத்தவரை நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.

படத்தின் தரம் தொடர்பான விமர்சனங்கள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதால், திரைப்படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்தது. இதனால் ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை பின்னர் கணிசமாக உயர்ந்தது.

இவ்வாறு ரூ.19,000 என்ற மிகக்குறைந்த தயாரிப்பு செலவில் உருவான ஒரு அனிமேஷன் படம், சுமார் ரூ.40 கோடி வசூலை எட்டியிருப்பது தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions