TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

போலி பிம்பம்’ உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? - மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!

Share This Article:

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் திமுக-வின் ‘மிசா’ வரலாறு குறித்து ஒரு செய்கை செய்து பேசினார். இது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்வது போல் இருப்பதாகக் கூறி திமுகவினர் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு முதலமைச்சர் விஜய், தனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதே தவிர யாருடைய மனதையும் புண்படுத்தும் உள்நோக்கம் கொண்டதல்ல என்று விளக்கமளித்தார். இதற்கிடையே, மிசா காலத்தில் நடந்ததை விளக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு வீடியோவை வெளியிட, அதற்குப் பதிலடியாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங், "பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட ‘சிறை சென்ற தியாகி’ என்ற போலி பிம்பம் உடைந்ததால் பதற்றம் பற்றிக்கொண்டதோ?" என்று கேள்வி எழுப்பிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

போலி பிம்பம்’ உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? - மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!

சட்டப்பேரவையில் வெடித்த சர்ச்சை மற்றும் விஜய்யின் செய்கை:

தமிழக சட்டமன்றத்தில் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய முதலமைச்சர் விஜய், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் ஆவேசமாகப் பேசினார். தனது உரையின் போது, "எது பேசினாலும் நாங்கள் (திமுக) 'மிசா'வை (MISA - Maintenance of Internal Security Act) பார்த்தவர்கள் என்று கூறுகிறார்கள். எல்லோருக்கும் 'மிசா' வரலாறு நன்றாகத் தெரியும்" என்று கூறி ஒரு குறிப்பிட்ட செய்கையைக் காண்பித்தார்.

முதலமைச்சர் விஜய்யின் இந்தச் செய்கை மற்றும் உடல்மொழி, திமுக தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினின் மிசா சிறைவாசத்தைக் கேலி செய்வது போல் அமைந்ததாகக் கூறி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொந்தளித்த திமுக – சமூக வலைத்தளங்களில் கண்டனம்:

முதலமைச்சரின் இந்தச் செய்கைக்கு திமுகவின் முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியினர் உடனடியாகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர். மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் அனுபவித்த தியாகத்தையும் சித்திரவதைகளையும் முதலமைச்சர் விஜய் தனது உடல்மொழி மூலம் கொச்சைப்படுத்திவிட்டதாக அவர்கள் ஆவேசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

உள்நோக்கம் இல்லை" – முதலமைச்சர் விஜய் விளக்கம்:

திமுகவினரின் தொடர் கண்டனங்களைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வ விளக்கமளித்தார். சட்டமன்றத்தில் கடந்த 7-ஆம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கையின் போது நடைபெற்ற விவாதத்தை சுட்டிக்காட்டி அவர் கூறினார்.

Content image

மு.க.ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்து எழுப்பப்பட்டுள்ள கேள்விகள்:

  • போலி பிம்பம் உடைந்ததா?: "பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட 'சிறை சென்ற தியாகி' என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?" என தவெக கேள்வி எழுப்பியுள்ளது.
  • மறைக்கப்படும் உண்மைகள்: "எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அதனை நீளமாகப் பேசியும் சிறைவாசம் தொடர்பான ஆவணம் பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை" என்று சாடியுள்ளனர்.
  • வீடியோ ஒரு தோல்வி முயற்சி: "உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது. பல நாட்கள் உணர்வற்ற பேச்சு மூலம் மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே இந்த வீடியோ தெரிகிறது" என தவெக விமர்சித்துள்ளது.
  • கட்டுக்கதை அம்பலம்: கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப் பிடிக்காது என்பதை இன்று வெளியான 'பொய் போராளியின்' காணொலி நிரூபித்துள்ளது என்று தவெக ஐடி விங் தங்களது அறிக்கையை முடித்துள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions