TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கரூர் சம்பவத்தின் ஓராண்டு நினைவு நாள்: 27-ந்தேதி நினைவுச்சின்னத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் விஜய்

Share This Article:

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி, செப்டம்பர் 27-ந்தேதி கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய், உயிரிழந்த 41 பேரின் நினைவாக அமைக்கப்பட உள்ள நினைவுச்சின்னத்திற்கு அடிக்கல் நாட்டி அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் சம்பவத்தின் ஓராண்டு நினைவு நாள்: 27-ந்தேதி நினைவுச்சின்னத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் விஜய்

கரூர் சம்பவத்தின் ஓராண்டு நினைவு நாள்: செப்டம்பர் 27-ல் கரூர் செல்லும் முதல்வர் விஜய்

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சம்பவம் நடைபெற்று செப்டம்பர் 27-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, முதலமைச்சர் விஜய் அன்றைய தினம் கரூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் ஓராண்டு நினைவு நாளையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் நினைவுச்சின்னத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் விஜய் கடந்த ஜூலை 10-ஆம் தேதி கரூருக்கு சென்றிருந்தபோது, உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை வழங்கினார். அப்போது, உயிரிழந்த 41 பேரின் நினைவாக வேலுசாமிபுரத்தில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Content image

அதன்படி, செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு நினைவுச்சின்னத்திற்கான அடிக்கல் நாட்டி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால், செப்டம்பர் 25 முதல் முதலமைச்சர் விஜய் நான்கு நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தப் பிரசாரத்துக்குப் பிறகு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் இரண்டாவது முறையாக கரூர் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், செப்டம்பர் 27-ஆம் தேதிக்கான முழுமையான அதிகாரப்பூர்வ பயண அட்டவணை குறித்து அரசு தரப்பில் இறுதி உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions