TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ஜப்பானை தாக்கிய டுஜுவான் புயல்: 2 பேர் பலி; 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்ற அறிவுறுத்தல்!

Share This Article:

ஜப்பானின் கிழக்கு பகுதிகளை தாக்கிய டுஜுவான் புயலால் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜப்பானை தாக்கிய டுஜுவான் புயல்: 2 பேர் பலி; 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்ற அறிவுறுத்தல்!

ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதிகளை டுஜுவான் புயல் தாக்கியதில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. 

கனமழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த புயல் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சிலர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புயல் மற்றும் கனமழை காரணமாக 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். டோக்கியோ, சிபா, கனகாவா, ஷிசுவோகா உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. 

Content image

புயல் காரணமாக விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. Japan Airlines 135 விமானங்களையும், All Nippon Airways 140 விமானங்களையும் ரத்து செய்தன. சில ரயில் சேவைகளும், டோக்கியோ–ஒசாகா இடையிலான புல்லட் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

தற்போது டுஜுவான் புயல் ஜப்பான் கடற்கரையை விட்டு வடகிழக்கு திசையில் பசிபிக் பெருங்கடல் நோக்கி நகர்ந்து வருகிறது. எனினும், ஏற்கனவே மழையால் மண் ஈரமாகியுள்ளதால் மேலும் கனமழை பெய்யும் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் தொடரும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions