TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ஒரே ஒரு கமெண்டால் சவுதியில் இலங்கை தமிழ் வாலிபருக்கு தூக்கு தண்டனை ! காப்பாற்றும் முயற்சியில் இலங்கை அதிபர்.

Share This Article:

சவுதி அரேபியாவில் சமூக வலைத்தளப் பதிவிற்காக இலங்கைத் தமிழ் இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை மீட்க அதிபர் அனுர குமார திசாநாயக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஒரே ஒரு கமெண்டால் சவுதியில் இலங்கை தமிழ்  வாலிபருக்கு தூக்கு தண்டனை ! காப்பாற்றும் முயற்சியில் இலங்கை அதிபர்.

கொழும்பு / ரியாத்:

வேலைவாய்ப்பிற்காக சவுதி அரேபியா சென்ற இலங்கையின் கல்முனை பகுதியைச் சேர்ந்த 24 வயதான தமிழ் இளைஞர் சிவராசா அனோஜனுக்கு (Sivarasa Anojan) சவுதி மேல்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதித்துள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி என்ன?

சுமார் 9 மாதங்களுக்கு முன்பு பணி நிமித்தமாக சவுதி அரேபியா சென்ற அனோஜன், சமூக வலைத்தளத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாகக் கூறி சவுதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில் இவருக்கு சவுதி நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 30 லட்சம் சவுதி ரியால் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இருப்பினும், மேல்முறையீட்டு விசாரணையின் போது, இந்த தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை:

இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை அதிபர் அனுர குமார் திசாநாயக்கவைச் சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

  • அதிபர் உறுதி: இளைஞர் அனோஜனை மீட்க சவுதி மன்னரிடம் நேரடியாக கருணை மனு (Clemency) அளிக்க உள்ளதாக அதிபர் அனுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
  • வெளிப்பரப்பு அமைச்சகம்: சவுதியில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாக உத்தியோகபூர்வ தீர்ப்பு நகலைப் பெறவும், சட்டப் பூர்வமாக இளைஞரைக் காப்பாற்றவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடியின் தலையீட்டைக் கோரும் அரசியல் தலைவர்கள்:

இலங்கையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், அதிபர் அனுர குமார திசாநாயக்கவிற்கு வைத்த கோரிக்கையில்:

"சவுதி அரச குடும்பத்துடன் நல்லுறவைக் கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை இலங்கை அரசு உடனடியாக நாட வேண்டும். மோடியின் ராஜதந்திர தலையீடு மூலம் இந்தத் தமிழ் இளைஞரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions