TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

குப்பையில் 3.788 கிலோ தங்கம்... ராமநாதபுரத்தில் 5 பேர் கைது

Share This Article:

ராமநாதபுரம் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 3.788 கிலோ தங்கக் கட்டிகள், 28 சவரன் நகைகள் மற்றும் ரூ.12.20 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பையில் 3.788 கிலோ தங்கம்... ராமநாதபுரத்தில் 5 பேர் கைது

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் எம்.ஜி.ஆர். நகர் அருகே உள்ள குப்பைக்கிடங்கில் தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் கிடைத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பைக்கிடங்கில் இருந்து 3.788 கிலோ தங்கக் கட்டிகள், 28 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.12.20 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கிடைத்த பொருட்களை சிலர் பிரித்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீசாரின் விசாரணையில், சந்தேகத்தின் பேரில் பிடிபட்டவர்கள், தங்கம் மற்றும் பிற பொருட்கள் குப்பைக்கிடங்கில் கிடைத்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பொருட்கள் எவ்வாறு குப்பைக்கிடங்கிற்கு வந்தன என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

Content image

மேலும், இவ்வளவு பெரிய அளவில் தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் குப்பைக்கிடங்கில் கிடைத்ததன் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. பொருட்களின் உரிமையாளர் யார், அவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைதான 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையின் முடிவில் இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions