TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கத்ரீனா கைஃப் உடல் மாற்றத்தை விமர்சித்த நெட்டிசன்கள்.. பதிலடி கொடுத்த சமீரா ரெட்டி

Share This Article:

கத்ரீனா கைஃபின் பிரசவத்திற்குப் பிறகான உடல் தோற்றம் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், நடிகை சமீரா ரெட்டி உடல் நேர்மறை மற்றும் சுய ஏற்றுக்கொள்ளுதல் குறித்து ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

கத்ரீனா கைஃப் உடல் மாற்றத்தை விமர்சித்த நெட்டிசன்கள்.. பதிலடி கொடுத்த சமீரா ரெட்டி

நடிகை கத்ரீனா கைஃப் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து அவரது பிரசவத்திற்குப் பிந்தைய உடல் தோற்றம் குறித்து சிலர் விமர்சனங்களையும் கேலி கருத்துகளையும் பதிவிட்டனர்.

கத்ரீனா கைஃப் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் விக்கி கவுஷலை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு அவர் பொது நிகழ்ச்சியில் தோன்றிய நிலையில், அவரது உடல் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் ஏற்பட்டது.

கத்ரீனாவுக்கு ஆதரவாக சமீரா ரெட்டி

இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் நடிகை சமீரா ரெட்டி உடல் நேர்மறை (Body Positivity) குறித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் ‘Plumpy’, ‘Thicc’, ‘Curvy’, ‘Chubby’, ‘Healthy’, ‘Chunky’, ‘Golu’ போன்ற உடல் தோற்றத்தை விவரிக்கும் வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. சமீரா ரெட்டி பல்வேறு உடைகளில் தனது தோற்றத்தை வெளிப்படுத்தும் காட்சிகளையும் அந்த வீடியோவில் பகிர்ந்திருந்தார். 

அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.instagram.com/reel/DdlRM28qWcZ/?utm_source=ig_embed&ig_rid=A1Tz8JFmaZY_SE6P3eRQash

Content image

“உங்கள் உடலை நேசியுங்கள்”

சமீரா ரெட்டி தனது பதிவில், பிரபலமாக இருந்தாலும், இளம் பெண்ணாக இருந்தாலும், புதிதாக தாயானவராக இருந்தாலும் அல்லது சமூகத்தின் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ளும் பெண்ணாக இருந்தாலும், பிறர் கூறும் கருத்துகளைப் பொருட்படுத்தாமல் ஒருவர் தனது உடலை நேசிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

அவரது பதிவில், “உங்கள் உடல் நீங்கள் அதை மீண்டும் நேசிக்க வேண்டும்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு Body Positivity குறித்து பேசியுள்ளார்.

பிரசவத்திற்குப் பிறகு உடல் மாற்றம்

குழந்தை பிறந்த பிறகு பெண்களின் உடலில் பல்வேறு இயற்கையான மாற்றங்கள் ஏற்படுவது குறித்து தற்போது சமூக வலைதளங்களில் விவாதம் அதிகரித்துள்ளது.

கத்ரீனா கைஃபை குறிவைத்து வெளியான விமர்சனங்களும் இதே விவாதத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ஒரு பெண் தாயான பிறகு உடனடியாக பழைய உடல் தோற்றத்துக்குத் திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரியா என்பது குறித்தும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

சமூக வலைதளங்களில் விவாதம்

கத்ரீனாவின் புகைப்படங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட விமர்சனங்களுக்கு பதிலாக சமீரா ரெட்டியின் பதிவு வெளியாகியுள்ளது. அவர் கத்ரீனா கைஃப் என்று நேரடியாக தனது பதிவில் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும், கத்ரீனாவின் பிரசவத்திற்குப் பிந்தைய தோற்றம் குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ள நேரத்தில் இந்த பதிவு வெளியாகியுள்ளதால் அது கத்ரீனாவுக்கு ஆதரவான செய்தியாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் பிரபல பெண்களின் உடல் தோற்றத்தை சமூக வலைதளங்களில் விமர்சிப்பது, தாய்மைக்குப் பிறகு ஏற்படும் உடல் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் பெண்களின் உடல் குறித்த சமூக எதிர்பார்ப்புகள் போன்ற விஷயங்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions