தமிழகத்தில் இயல்பைவிட 60% கூடுதல் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கான சூழல் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம்
தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கான சூழல் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 24-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மற்ற தமிழக மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
25, 26-ம் தேதிகளில் பல மாவட்டங்களில் மழை
செப்டம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் மழையின் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுடன் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எப்படி இருக்கும்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் சில பகுதிகளில் மழை பெய்து வருவதால் நகரில் வெப்பத்தின் தாக்கமும் ஓரளவு குறைந்துள்ளது.
27-ம் தேதி முதல் மழை குறையும்
செப்டம்பர் 27-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதன்பிறகு செப்டம்பர் 29-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.