15 வயது சிறுமியை திருமணம் செய்ததாகக் கூறி வழக்கு கடத்திச் சென்ற வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
15 வயது சிறுமியை திருமணம் செய்ததாகக் கூறி கடத்திச் சென்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செப்.24-
15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கடத்திச் சென்ற வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி உமாமகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.
சென்னை அம்பத்தூர் இந்திரா காந்தி பேங்க் காலனியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 28). இவர் கடந்த 25-2-2024 அன்று அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.
இது குறித்து அந்த சிறுமியின் தாயார் அம்பத்தூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ரஞ்சித்குமாருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உமாமகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.
மேலும் அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
மேலும் போக்சோ சட்டப்பிரிவின்படி 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து, மேற்கண்ட தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

0 Comments
No comments yet. Be the first to comment.