TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

நாடாளுமன்றத்தில் காரசாரம்! முதல்வர் ஸ்டாலினை கிண்டலடித்த சபாநாயகர் ஓம் பிர்லா?

Share This Article:

"கருப்பு கொடி காட்டினால் என்ன?" - நாடாளுமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் போராட்டத்தைக் கிண்டலடித்த சபாநாயகர் ஓம் பிர்லா! நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீதான விவாதம் இன்று அனல் பறக்கத் தொடங்கியது. திமுக சார்பில் மூத்த உறுப்பினர் டி.ஆர். பாலு உரையாற்றியபோது, தமிழகத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழலை அவையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

நாடாளுமன்றத்தில் காரசாரம்! முதல்வர் ஸ்டாலினை கிண்டலடித்த சபாநாயகர் ஓம் பிர்லா?

டி.ஆர். பாலுவின் வாதம்: மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வருவது தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனத் தெரிவித்த டி.ஆர். பாலு, "மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் சட்டத்தைக் கண்டித்து எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்" என்று ஆவேசமாகப் பதிவு செய்தார்.

சபாநாயகரின் கிண்டல்: டி.ஆர். பாலுவின் பேச்சைப் பாதியிலேயே இடைமறித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மிகவும் அலட்சியமான மற்றும் கிண்டலான தொனியில் ஒரு கருத்தைப் பதிவிட்டார். அவர் கூறுகையில், "நீங்கள் அங்கே கருப்பு கொடி காட்டினால் என்ன... அல்லது மஞ்சள் பொடி காட்டினால் என்ன? அதை ஏன் இங்கே சபையில் கூறுகிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

சபாநாயகரின் இந்தப் பேச்சு திமுக உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநில முதலமைச்சர் மக்களின் உரிமைக்காக முன்னெடுத்துள்ள போராட்டத்தை, நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் சபாநாயகர் இவ்வளவு ஏளனமாகப் பேசியது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது எனத் தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions