TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மதுரையில் தனுஷுக்கு தடபுடல் வரவேற்பு; புதிய பட பூஜையில் பங்கேற்கிறார்

Share This Article:

இயக்குநர் தமிழரசன் பச்சுமுத்து இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். இதையொட்டி மதுரையில் தனுஷுக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட உள்ளதுடன், புதிய படத்தின் பூஜை நிகழ்விலும் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் தனுஷுக்கு தடபுடல் வரவேற்பு; புதிய பட பூஜையில் பங்கேற்கிறார்

மதுரை,

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள இந்த புதிய படத்தின் பூஜை, சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகில் உள்ள மாரநாடு கருப்புசாமி கோவிலில் நடைபெற உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், 'ஓம்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்குள்ள புதிய படத்திலும் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படம் தனுஷின் 56-வது படமாக உருவாகிறது.

மதுரை வந்த தனுஷ்

இந்நிலையில், புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையில் பங்கேற்பதற்காக நடிகர் தனுஷ் விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தனுஷை வரவேற்க திரண்ட ரசிகர்கள், அவருக்கு மாலை அணிவித்து, கையில் வேல் மற்றும் மலர்க்கொத்து வழங்கினர். ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட தனுஷ், காரின் சன்ரூப் வழியாக நின்றபடி கையசைத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Content image

கருப்புசாமி கோவிலில் பட பூஜை

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள இந்த புதிய படத்தின் பூஜை, சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகில் உள்ள மாரநாடு கருப்புசாமி கோவிலில் நடைபெற உள்ளது. இந்த பூஜையில் பங்கேற்பதற்காக தனுஷ்ஷூடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் வந்துள்ளார்.

18 அடி உயர அருவாள் காணிக்கை

புதிய படத்தின் பூஜையை முன்னிட்டு மாரநாடு கருப்புசாமி கோவிலில் 18 அடி உயர அருவாள் காணிக்கையாக செலுத்தப்பட உள்ளது. மேலும், ரசிகர்களுக்காக 16 கிடாக்கள் வெட்டி விருந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படத்தின் பூஜை நிகழ்வை முன்னிட்டு தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions