TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Share This Article:

தமிழ்நாட்டில் காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தப்பட்டு அசம்பாவிதம் ஏற்பட்டால் பள்ளித் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

சென்னை:

தமிழ்நாட்டில் காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைவதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று வருகின்றன. தேர்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், காலாண்டு விடுமுறை நாட்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு ஓய்வு கிடைக்கும் வகையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Content image

மேலும், காலாண்டு விடுமுறை காலத்தில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கும், பள்ளி சார்பில் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை மீறி மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் அல்லது விபத்து ஏற்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலாண்டு விடுமுறையில் குறிப்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் நடைமுறை சில பள்ளிகளில் இருந்து வரும் நிலையில், இந்த அறிவுறுத்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனால், காலாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்றும், பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி விடுமுறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions