TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மதுரையில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த முழுமையான விவரங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

Share This Article:

தமிழக முதல்-அமைச்சர் விஜய் மதுரையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தைத் தொடங்கி வைத்து, அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவிக்கிறார். தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துவிட்டு, மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

மதுரையில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த முழுமையான விவரங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

பயண விபரம் மற்றும் வரவேற்பு:

மதுரையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தினை முதல்-அமைச்சர் விஜய் இன்று முறைப்படி துவக்கி வைக்கிறார். இதற்காக இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு, தனி விமானம் மூலம் பகல் 11 மணிக்கு அவர் மதுரை வந்தடைகிறார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான மற்றும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி விமான நிலையத்தில் இருந்து அவர் புறப்படுகிறார். 'ரோடு ஷோ' (Road show) மூலமாக பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங்ரோடு சுற்றுச்சாலை மற்றும் கருப்பாயூரணி வழியாக அவர் பயணம் செய்ய உள்ளார். இதற்கு ஏதுவாக அந்தப் பகுதிகளில் இரும்பு தடுப்புகள் மற்றும் சவுக்கு கம்புகள் மூலம் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

35 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பு:

இதன்பின்னர் மதியம் 12 மணியளவில் மதுரை அரசு மருத்துவமனையை அவர் சென்றடைகிறார். அரசு மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில், 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில் குத்துவிளக்கு ஏற்றி உரையாற்றுகிறார்.

இந்த விழாவின்போது மதுரை மாவட்டத்தில் உள்ள பிற அரசு மருத்துவமனைகளில் பிறந்த 25 குழந்தைகளுக்குத் தன் கரங்களால், தங்க மோதிரங்களை வழங்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டுக்கு நேரடியாகச் சென்று, அந்த மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவிக்க இருக்கிறார்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார். முதல்-அமைச்சர் கைகளால் எந்தெந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன என்ற விபரம் முன்கூட்டியே, சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Content image

செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்கள் தவிர:

இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் அமைந்துள்ள செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் இந்தத் திட்டம் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. விழாவையொட்டி மதுரை அரசு மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் நேற்று இரவே முழுமையாக நிறைவு பெற்றன. முதல்-அமைச்சர் வருகையையொட்டி அரசு மருத்துவமனை கட்டிடங்களுக்குப் பல நிறங்களில் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றன. மேலும், கருத்தரங்க கூடமும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

காந்தி அருங்காட்சியகத் திறப்பு மற்றும் கோவில் வழிபாடு:

இந்த விழா நிறைவு பெற்றதும், முதல்-அமைச்சர் விஜய் புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தினை திறந்து வைத்துப் பார்வையிடுகிறார். இதன்பின்னர் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். இதனைத் தொடர்ந்து உள்ளூர் அமைச்சர்கள், த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். பின்பு மாலை 4.30 மணிக்கு உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் மதுரையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.




0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions