TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

வெற்றிப்பயணம் திட்டம் நாளை முதல் அமல் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Share This Article:

தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் ‘வெற்றிப்பயணம்’ திட்டம் அக்டோபர் 2 முதல் அமலுக்கு வருகிறது. 12,692 அரசு பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ள நிலையில், நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிப்பயணம் திட்டம் நாளை முதல் அமல் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

12,692 பேருந்துகள்

தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள ‘வெற்றிப்பயணம்’ திட்டம் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், திட்டத்தை நாளை தொடங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். புதிய திட்டத்தின் மூலம் எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ், புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் உள்ளிட்ட கூடுதல் சேவைகளுக்கும் இந்த இலவசப் பயண வசதி விரிவுபடுத்தப்படுகிறது.

இதன்படி, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் மொத்தம் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள், அதாவது சுமார் 69 சதவீத பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ளன. மொத்தம் 1,94,649 பேருந்து நடைகளில் 1,65,312 நடைகள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Content image

இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் தொலைதூரக் கல்லூரிகளுக்குச் செல்லவும், பெண்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ள பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடனான (ETM) இணைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், சோதனை மற்றும் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. அக்டோபர் 2 முதல் ‘வெற்றிப்பயணம்’ திட்டம் நடைமுறைக்கு வருவதால், மாநிலம் முழுவதும் மகளிருக்கான இலவச பொதுப் போக்குவரத்து வசதி மேலும் விரிவடைய உள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions