TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் பள்ளி மாணவர்களிடையே தகராறு: 8 பேர் மீது வழக்குப்பதிவு

Share This Article:

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்தார். இதுதொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் பள்ளி மாணவர்களிடையே தகராறு: 8 பேர் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரீல்ஸ்

விழுப்புரம் அருகே வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் குமாரக்குப்பத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும், நரையூரை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் யார் கெத்து என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நரையூரை சேர்ந்த மாணவரின் நண்பர்களான 4 மாணவர்கள் வளவனூர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர். அப்போது அங்கு வந்த குமாரக்குப்பத்தை சேர்ந்த மாணவரை அவர்கள் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Content image

இதேபோல் குமாரக்குப்பத்தை சேர்ந்த மாணவரின் ஆதரவாளர்களான 4 மாணவர்கள் நரையூரை சேர்ந்த மாணவரை வழிமறித்து தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அந்த மாணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விசாரணை

இது குறித்து இரு தரப்பினர் சார்பிலும் தனித்தனியாக வளவனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions