TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ஆண்களின் பார்வை எப்படி இருக்கிறது? – ‘விஷப்பரீட்சை’ நடத்திய 4 பெண்கள்..!

Share This Article:

ஆண்கள் பெண்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை நேரடியாக அறியும் வகையில் 4 பெண்கள் இணைந்து ‘விஷப்பரீட்சை’ என்ற பெயரில் ஒரு முயற்சியை மேற்கொண்டனர். இருசக்கர வாகனங்களில் சென்ற பலரும் தங்களை பார்த்தபடியே சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முயற்சி தொடர்பான காட்சிகள் மற்றும் கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

ஆண்களின் பார்வை எப்படி இருக்கிறது? – ‘விஷப்பரீட்சை’ நடத்திய 4 பெண்கள்..!

புதுடெல்லி,

ஆண்களின் பார்வை எப்படி இருக்கிறது? என்பதை அறிய தலைநகர் டெல்லியில் 4 பெண்கள் 'விஷப்பரீட்சை' நடத்தினர்.

விஷப்பரீட்சை

உலகம் முழுவதுமே பெண்கள் மீதான ஆண்களின் பார்வை பொதுவானதாகவே உள்ளது. இது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் டெல்லியைச் சேர்ந்த 4 பெண் நிருபர்கள் இதனை நேரில் அறிந்து கொள்ள விஷப்பரீட்சையில் இறங்கினர்.

அவர்கள் டெல்லியில் குறிப்பிட்ட இடங்களான மூல்சந்த், பட்டேல் நகர், கீர்த்தி நகர், ஜனக்புரி, ரஜோரி கார்டன், திலக் நகர் போன்ற இடங்களை தேர்வு செய்தனர். அங்கு இரவில் வாகன நடமாட்டம் அதிகம் உள்ள நேரத்தில் சாலையோரம் தனியாக நின்றனர். அப்போது பல வாகனங்கள் அவர்களை கடந்து சென்றன.

Content image

பெண்களை நெருங்கவில்லை...

அவற்றில் சில வாகனங்கள் இவர்களை கண்டதும் நெருங்கி வந்து நின்றன. வாகனத்தில் இருந்தவர்கள் எங்காவது கொண்டு இறக்கி விட வேண்டுமா? என கேட்டனர். சிலர் வேறு விதமாக கேட்டுள்ளனர். சில வாகனங்கள் அவர்களை சுற்றி வந்துள்ளன. இருசக்கர வாகனங்களில் சென்றவர்களில் பலரும் இவர்களை உற்றுப் பார்த்தபடியே சென்றுள்ளனர். சிலர் முறைத்துப் பார்த்துள்ளனர்.

ஒரு சிலர் மட்டும் அவர்களிடம் சந்திக்கலாமா? என கேட்டு இருக்கிறார்கள். இதன் பிறகு அந்த ஆண்கள் அந்த பெண்களை நெருங்கவில்லை. தங்களது அனுபவங்களை அவர்கள் செய்தியாகவும் வெளியிட்டு இருக்கிறார்கள். டெல்லியை பொறுத்தவரை பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் சில நேரங்களில் பெரிதாக தலை தூக்கும்.

எந்த பயமும் இல்லை

உண்மையிலேயே சொல்லப்போனால் டெல்லி, பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகவே இருக்கிறது. பகலிலோ, இரவிலோ பெண்களுக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நள்ளிரவு வேளைகளில்தான் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions