TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

வனவிலங்கு என நினைத்து வாலிபரை சுட்டுக்கொலை – வேட்டைக்கு சென்ற நண்பர்கள் 3 பேர் கைது!

Share This Article:

வேட்டையாட சென்றபோது புதர்களுக்கு இடையே ஏற்பட்ட அசைவைக் கண்டு வனவிலங்கு என தவறாக நினைத்து துப்பாக்கியால் சுட்டதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக அவருடன் சென்ற நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனவிலங்கு என நினைத்து வாலிபரை சுட்டுக்கொலை – வேட்டைக்கு சென்ற நண்பர்கள் 3 பேர் கைது!

பெங்களூரு,

சிக்கமகளூரு அருகே வேட்டையாட சென்றபோது வனவிலங்கு என நினைத்து வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாட்டு துப்பாக்கி

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா கெரேமக்கி கிராமத்தை சேர்ந்த நண்பர்கள் 7 பேர் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதிக்குள் வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கிகளுடன் சென்றுள்ளனர். அடர்ந்த வனப்பகுதியில் வேட்டையாடி கொண்டிருந்தபோது. புதர்களுக்கு இடையே ஏதோ நகர்வதை கண்டு வனவிலங்கு என தவறாக நினைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில், அவர்களுடன் சென்ற அதே கிராமத்தை சேர்ந்த சேத்தன் (வயது 26) என்ற வாலிபர் மீது குண்டு பாய்ந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற 6 நண்பர்களும் உடனே அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர்.

Content image

போலீசார்

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொப்பா போலீசார் சேத்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொப்பா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், தலைமறைவாக இருந்த 6 பேரில் 3 பேரை கைது செய்தனர்.

அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இது உண்மையில் தவறுதலாக நடந்த துப்பாக்கிச்சூடா? அல்லது சேத்தனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே முன்விரோதம் ஏதும் இருந்து, அதன்காரணமாக அவரை திட்டமிட்டு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்குப்பதிவு

மேலும், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுத்துப்பாக்கி இவர்களுக்கு எப்படி கிடைத்தது? அதற்கு உரிய உரிமம் பெறப்பட்டுள்ளதா? இவர்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி வந்த கும்பலா? என்றும் பல்வேறு கோணங்களில் கொப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions