TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ஓட்டுநர் போல உடை அணிந்து அரசு பேருந்தை இயக்க முயன்ற போதை ஆசாமி: நாகையில் பரபரப்பு!

Share This Article:

நாகை புதிய பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் போல உடை அணிந்துகொண்டு அரசு விரைவு பேருந்தை இயக்க முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநரும் நடத்துனரும் டீ குடிக்கச் சென்ற நேரத்தில் பேருந்தை இயக்கிய அவரை வழிமறித்து பிடித்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டுநர் போல உடை அணிந்து அரசு பேருந்தை இயக்க முயன்ற போதை ஆசாமி: நாகையில் பரபரப்பு!

நாகை:

நாகை புதிய பேருந்து நிலையத்தில், ஓட்டுநரைப் போல உடை அணிந்துகொண்டு அரசு விரைவு பேருந்தை இயக்க முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அரசு விரைவு பேருந்து ஒன்று புறப்படுவதற்குத் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. பேருந்தில் ஓட்டுநரும், நடத்துனரும் பணியில் இருந்தனர். அப்போது இருவரும் பேருந்தை சாவியுடன் நிறுத்திவிட்டு, அருகில் உள்ள கடைக்குச் சென்று டீ குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பேருந்து ஓட்டுநர் அணியும் உடையை அணிந்துகொண்டு பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் யாருடைய அனுமதியும் இல்லாமல் பேருந்தை இயக்கி அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.


Content image

இதனை சற்று தொலைவில் இருந்து கவனித்த உண்மையான பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பேருந்தை நோக்கி விரைந்து சென்ற அவர்கள், அந்த பேருந்தை வழிமறித்து நிறுத்தினர்.

பின்னர் பேருந்துக்குள் இருந்த அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஓட்டுநரும், நடத்துனரும் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பேருந்தை இயக்க முயன்ற அந்த நபரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டுநரும் நடத்துனரும் பேருந்தை சாவியுடன் விட்டுச் சென்ற நேரத்தைப் பயன்படுத்தி, ஓட்டுநர் உடையை அணிந்துகொண்டு பேருந்தை இயக்க முயன்ற சம்பவம் நாகை புதிய பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions