TBC News

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை ஷெட்யூல் செய்யலாம்: பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மெட்டா!

Share This Article:

வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களைத் தானாக அனுப்பும் புதிய வசதி சோதனையில் உள்ளது. தற்போது சில ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த வசதி எப்போது அனைவருக்கும் அறிமுகமாகும்?

வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை ஷெட்யூல் செய்யலாம்: பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மெட்டா!

ஷெட்டூல் செய்யலாம்

"வாட்ஸ் அப் "பயனர்கள் குழுச்செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை முன்னெச்சரியே திட்டமிட்டு அனுப்பும் புதிய வசதியை அறிமுகப்படுத்துவதற்கான சோதனையில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

தற்போது, வாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட நேரத்தில் செய்திகளைத் தானாக அனுப்புவதற்கான வசதி சில ஆண்டராய்டு பயனர்களுக்கு பீட்டா வெர்ஷனாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த வசதி விரைவில் மற்ற பயனர்களுக்கும் விரிவுபடுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய வசதியில் மூலம், பயனர்கள் குழுச்செய்திகள், இணையதள இணைப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் முன், நேரத்தை முன்னெச்சரியே தேர்வு செய்யலாம். குறைந்தபட்சம் "10 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 2 வாரங்கள் வரை" முன்னெச்சரியே செய்திகளைத் திட்டமிட்டு முடியும் எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட நேரம் வந்ததும், பயனர்கள் மீண்டும் நேரடியாக அனுப்ப வேண்டிய அவசியமின்றி செய்திகள் தானாகவே அனுப்பப்படும். செல்போன் இணைய இணைப்பில் இல்லாவிட்டாலும் செய்திகள் அனுப்பப்படும் வகையில் இந்த வசதி உருவாக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Content image

இந்த வசதி சோதனையில் உள்ளது

தனிப்பட்ட உரையாடல்கள் மட்டுமின்றி, வாட்ஸ் அப் குழு உரையாடல்களிலும் இந்த வசதி செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனுப்புவதற்காக திட்டமிடப்பட்டுள்ள செய்திகளைப் பார்க்கவும், தேவையில்லாதவற்றை நீக்குவதற்கும் ஆப்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பிறந்தநாள் வாழ்த்துகள், முக்கியமான விஷயங்கள் பற்றிய நினைவூட்டல்கள், மற்றும் அலுவலகச் செய்திகளைப் போன்றவற்றைச் சரியான நேரத்தில் அனுப்ப இந்த வசதி உதவியாக இருக்கும்.குறிப்பிட்ட நேரத்தில் சில பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

எப்போது அனைவருக்கும் கிடைக்கும்?

தற்போது இந்த வசதி குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அனைவருக்கும் கிடைக்கும் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions