கொளத்தூரில் நடந்த சதி... ஸ்டாலினை எச்சரித்த திருமா!
முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி தோல்விக்கு, சுமார் ஒரு லட்சம் ஓட்டுகள் திட்டமிட்டு நீக்கப்பட்ட சதியே காரணம் என இந்தியா கூட்டணி மேடையில் திருமா கருத்து
இன்றைக்கு நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்துல பல அதிரடி திருப்பங்கள் நடந்துச்சு. இந்த கூட்டத்துல கவனிக்க வேண்டிய முதல் விஷயம், இந்த கூட்டணியில இப்போ திமுக இல்லை. ஆனா, விஜய்யோட தவெக உள்ள வந்திருக்காங்க. தவெக சார்பா அமைச்சர் ராஜ்மோகனும் இந்த கூட்டத்துல கலந்துக்கிட்டாரு. இந்த மேடையில விசிக தலைவர் திருமாவளவன் பேசுன விஷயம் இப்போ தமிழ்நாட்டு அரசியல்ல பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.
முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில நடந்த ஒரு பெரிய ஓட்டு சதியை பத்தி திருமா வெளிப்படையா பேசி இருக்காரு .
"எலக்சனுக்கு முன்னாடியே ஒரு அம்மா எனக்கு போன் பண்ணி, கொளத்தூர்ல பெரிய சதி நடக்குது, ஸ்டாலின் ஜெயிக்கிறது கஷ்டம்னு சொன்னாங்க. நான் உடனே இதை சேகர்பாபு கிட்ட சொல்லிட்டு, நேரா ஸ்டாலின்கிட்டயும் போய் சொன்னேன். 'அண்ணே, இப்படி ஒரு பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு, உஷாரா இருங்க'னு எச்சரிச்சேன்.
ஆனா ஸ்டாலின் அதை பெருசா எடுத்துக்கல. 'அதெல்லாம் ஒன்னும் இல்ல, நம்ம ஆளுங்க சரியா செக் பண்ணிட்டு தான் இருக்காங்க'னு சொல்லிட்டாரு. சேகர்பாபுவும் எல்லாம் கரெக்ட்டா இருக்குனு சொன்னாரு. ஆனா கடைசில பாத்தா, கொளத்தூர்ல மட்டும் சுமார் ஒரு லட்சம் ஓட்டுகளை தூக்கிட்டாங்க. 20 ஆயிரம் பேர் இறந்துட்டாங்கனு வச்சாலும், மீதி பேரை 'அட்ரஸ் மாறிட்டாங்க' (Shifted), 'டபுள் ஓட்டு' (Duplication)னு சொல்லி திட்டமிட்டே குறிவச்சு தூக்கியிருக்காங்க.
தமிழ்நாட்டுல மட்டும் 97 லட்சம் ஓட்டுகளை நீக்கியிருக்காங்க. இந்த அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்க்கத்தான் நாங்க ராகுல் காந்தி தலைமையிலான இந்தியா கூட்டணியில தொடர்ந்து இருக்கோம் என்று திருமா பேசியிருக்காரு .
திருமா இப்படி திமுகவுக்கு ஆதரவா, ஓட்டு போனதால தான் ஸ்டாலின் தோத்தாருங்குற மாதிரி பேச, அதே கூட்டத்துல இருந்த தவெக அமைச்சர் ராஜ்மோகனுக்கு என்ன சொல்லுறதுனே தெரியல .
ஸ்டாலின் தோத்து போனதுக்கு காரணம் ஊழல், சட்ட ஒழுங்கு பிரச்னை, பெண்களுக்கு பாதுகாப்பு , அவங்களோட நிர்வாக திறமையின்மை தான் முக்கிய காரணம் அப்படினு ஆளும் கட்சி பேசிவர சூழல்ல திருமாவின் இந்த பேச்சு புதிய விவாதத்தை கெளப்பி இருக்கு. திமுக இல்லாத இந்தியா கூட்டணி மேடையில, கொளத்தூர் ஓட்டு நீக்கமும், திமுகவோட தோல்விக்கான காரணமும் விவாதமா மாறி இப்போ அரசியல் வட்டாரத்துல அனலை கிளப்பியிருக்கு.

0 Comments
No comments yet. Be the first to comment.