TBC News

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

வாக்காளர் பட்டியல் திருத்த முறைகேடு: தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Share This Article:

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) முறைகேடு நடந்துள்ளதாக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்த முறைகேடு: தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!


வாக்காளர் பட்டியல் திருத்த முறைகேடு: தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) விவகாரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 'இண்டியா' கூட்டணியைச் சேர்ந்த 13 தலைவர்கள் தாக்கல் செய்த மனு தொடர்பாக விளக்கம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பின்னணியும் இண்டியா கூட்டணியின் குற்றச்சாட்டும்:

நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளுக்கு, மற்ற தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் 'இண்டியா' கூட்டணி வலியுறுத்தி வருகிறது.







Content image

டெல்லியில் பிரம்மாண்ட பேரணி மற்றும் வழக்கு:

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், சுப்ரியா சுலே உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்ட உச்ச நீதிமன்றத்தை நோக்கிய பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது.

தனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சஞ்சய் ராத், டி.ராஜா, எம்.ஏ. பேபி உள்ளிட்ட 13 முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மனுதாரர்களாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் எதிர்மனுதாரர்களாகவும் சேர்க்கப்பட்டனர்.

மனுவின் முக்கிய கோரிக்கை: SIR நடைமுறை தொடர்பாகத் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகள் மற்றும் அதனைச் செயல்படுத்திய விதம் குறித்த அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.

Content image

உச்ச நீதிமன்ற விசாரணை:

இந்த மனு தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சூரியகாந்த்:

"அடுத்தகட்ட விசாரணையின் போது, மனுதாரர்களில் ஒருவரிடம் அவரது நடத்தை தொடர்பாகச் சில கேள்விகளை எழுப்ப நீதிமன்றம் விரும்புகிறது" எனக் குறிப்பிட்டார்.

மேலும், இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்திய தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions