TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

என்னைக் கொன்றாலும் சரி... டிசம்பரில் வங்காளதேசம் திரும்புவது உறுதி – ஷேக் ஹசீனா!

Share This Article:

- வரும் டிசம்பர் மாதம் வங்காளதேசத்திற்குத் திரும்புவது உறுதி என முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். கைது, சித்ரவதை, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அஞ்சப்போவதில்லை என அவர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

என்னைக் கொன்றாலும் சரி... டிசம்பரில் வங்காளதேசம் திரும்புவது உறுதி – ஷேக் ஹசீனா!

புதுடெல்லி:

என்னைக் கைது செய்தாலும், சித்ரவதைக்கு உள்ளாக்கினாலும், கொலை செய்ய முயன்றாலும் அஞ்சப்போவதில்லை; வரும் டிசம்பர் மாதம் தாய்நாடான வங்காளதேசத்திற்குத் திரும்புவது உறுதி என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

2024 மாணவர் போராட்டம்: நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா

வங்காளதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்து, பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதற்கிடையே, ஷேக் ஹசீனாவைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்காளதேச அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

Content image

டிசம்பரில் தாய்நாடு திரும்புவேன் – ஷேக் ஹசீனா

இந்தச் சூழலில், அமெரிக்காவின் வாஷிங்டனில் 'அமெரிக்கா-வங்காளதேச உறவுகள் மையம்' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, வரும் டிசம்பர் மாதம் வங்காளதேசத்திற்குத் திரும்ப உள்ளதாகவும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தனது சொந்த நாட்டிற்குத் திரும்புவதில் எந்த அச்சமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அங்குள்ள அரசு தன்னைக் கைது செய்யலாம், கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கலாம், ஏன் கொலை செய்யக்கூட முயற்சி செய்யலாம் என்பதையும் அறிந்திருப்பதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், தாய்நாட்டிற்குத் திரும்புவது தனது முக்கியமான கடமை என்றும், தனது மக்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதற்காக அங்கு சென்றே தீருவேன் என்றும் அவர் உறுதியுடன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறும் அறிவிப்பு

இந்தியாவில் தங்கியிருக்கும் ஷேக் ஹசீனா, டிசம்பரில் வங்காளதேசத்திற்குத் திரும்புவதாகத் தெரிவித்துள்ள இந்த அறிவிப்பு அந்நாட்டின் அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது. அவர் நாடு திரும்புவதற்கான சாத்தியம், அங்குள்ள அரசியல் நிலவரம் மற்றும் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான விவாதங்களையும் இந்த அறிவிப்பு மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions