TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கட்சி தாவிய யூசுப் பதான்... நிலத்தை அள்ளிக்கொடுத்த குஜராத் அரசு! வெடித்தது புது சர்ச்சை!

Share This Article:

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு, குஜராத் அரசு சர்ச்சைக்குரிய நிலத்தை சலுகை விலையிலும் பரிசாகவும் வழங்குவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி தாவிய யூசுப் பதான்... நிலத்தை அள்ளிக்கொடுத்த குஜராத் அரசு! வெடித்தது புது சர்ச்சை!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு குஜராத் அரசு நிலம் வழங்கி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் தனது வீட்டின் அருகே உள்ள 10,527 சதுர அடி மாநகராட்சி நிலத்தை வாங்க யூசுப் பதான் பல ஆண்டுகளாக முயன்று வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு இதற்கு குஜராத் அரசு அனுமதி மறுத்திருந்தது. அதன் பிறகு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நேரத்தில், அவர் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் யூசுப் பதான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Content image

தற்போது மேற்கு வங்க அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு பாஜக ஆட்சியைப் பிடித்ததால் மம்தாவின் 15 கால ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த யூசுப் பதான் உள்ளிட்ட 20 எம்.பி.க்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்தனர். கட்சி மாறிய கையோடு குஜராத் உயர் நீதிமன்றத்தில் தான் தொடர்ந்த ஆக்கிரமிப்பு வழக்கையும் யூசுப் பதான் வாபஸ் பெற்றார்.

இதன் தொடர்ச்சியாக, நீண்ட காலமாக சர்ச்சையில் இருந்த அந்த 10,527 சதுர அடி நிலத்தில் 5,382 சதுர அடி நிலத்தை யூசுப் பதானுக்கு பரிசளிக்க குஜராத் அரசு முன்வந்துள்ளது. மீதமுள்ள நிலத்தை 45 சதவீத தள்ளுபடி விலையில் அவருக்கே கிரயம் செய்து கொடுக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மம்தாவின் கட்சியை விட்டு விலகியதாலேயே அவருக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தற்போது புதிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions