TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் லட்சக்கணக்கான தரவுகள் திருட்டு! டார்க் வெப்பில் கசிந்த ரகசியங்கள்!

Share This Article:

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர் விவரங்கள் டார்க் வெப் தளத்தில் கசிந்துள்ள நிலையில், வங்கி சேவைகள் வழக்கம்போல் இயங்குவதாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் லட்சக்கணக்கான தரவுகள் திருட்டு! டார்க் வெப்பில் கசிந்த ரகசியங்கள்!

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இணையவழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 'சிரிபூசிம்' என்ற அடையாளம் தெரியாத ஹேக்கர் கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தி, வங்கியுடன் தொடர்புடைய சுமார் 3.75 லட்சம் தகவல்களைத் திருடி டார்க் வெப் தளத்தில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, செல்போன் எண், முகவரி, கடன் விண்ணப்பங்கள் மற்றும் வங்கிக் கணக்கு ஆவணங்கள் போன்றவை இந்தக் கசிவில் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Content image

இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்ததைத் தொடர்ந்து எஸ்பிஐ நிர்வாகம் பங்குச்சந்தைக்கு அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. முதற்கட்ட ஆய்வில் சில ஆயிரம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்திருப்பது கண்டறியப்பட்டாலும், வங்கியின் முக்கிய சர்வர்கள் மற்றும் அன்றாடச் செயல்பாடுகளில் எந்தவித நிதிப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், வழக்கம் போல் வங்கிச் சேவைகள் தடையின்றி இயங்கும் என்றும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

பாதுகாப்பை பலப்படுத்த உடனடியாக சைபர் தடுப்பு நெறிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதோடு, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் உதவியுடன் தீவிர விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. நிலைமையை முழுமையாகக் கண்காணித்து வரும் எஸ்பிஐ, கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions