முதல் நாளிலேயே மாஸ் காட்டும் ஜியோ: 100 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த பங்குகள் !
இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்கு வெளியீடு, தொடங்கிய 100 நிமிடங்களிலேயே முழுமையாக விற்றுத்தீர்ந்து பங்குச்சந்தையில் மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) இன்று தொடங்கி அக்டோபர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஐபிஓ மூலம் சுமார் 30 ஆயிரத்து 213 கோடி ரூபாய் நிதியைத் திரட்ட ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டது. இதுதான் இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகப்பிரம்மாண்டமான ஐபிஓ ஆகும். இதற்கான ஒரு பங்கின் விலை 1,065 ரூபாய் முதல் 1,119 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பொதுவாக பங்குச்சந்தையில் பெரிய நிறுவனங்களின் பங்குகள் முதல் நாளில் மிக மெதுவாகவே விற்பனையாகும். ஆனால், ஜியோவின் ஐபிஓ தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே 85 சதவீத பங்குகள் முதலீட்டாளர்களால் வாங்கப்பட்டுவிட்டன
அடுத்த 40 நிமிடங்களில், அதாவது வெறும் 100 நிமிடங்களுக்குள் மொத்த பங்குகளும் முழுமையாக விற்றுத்தீர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.மொத்தம் 19.75 கோடி பங்குகள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில், முதலீட்டாளர்கள் 20.25 கோடி பங்குகளைக் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதனால் இன்று காலையிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகப்படியான சந்தா பெறப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே முதலீட்டாளர்கள் மத்தியில் கிடைத்த இந்த அமோக வரவேற்பு பங்குச்சந்தை வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.