முதல்வர் விஜய் அதிரடி: 3 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் மூன்று முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசியலிலும் காவல் துறையிலும் தற்போது ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் காவல் துறையில் நிர்வாக ரீதியான சில அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தமிழக உள்துறை அமைச்சகம் இன்று மூன்று முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து முதன்மைச் செயலாளர் கார்த்திக் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இந்த உத்தரவின்படி, இதுவரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் ஐஜியாக பணியாற்றி வந்த சந்தோஷ் குமார் ஐபிஎஸ், தற்போது சிவில் சப்ளைஸ் சிஐடி பிரிவின் புதிய ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதைக் கண்காணிக்கும் முக்கியப் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவருக்கு முன்பு அந்தப் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றி வந்தவர் ரூபேஷ் குமார் மீனா
அவர் தற்போது மாற்றம் செய்யப்பட்டு, திருச்சி மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.திருச்சி மாநகர காவல் ஆணையராக இதுவரை திறம்பட பணியாற்றி வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி காமினி, அங்கிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் தற்போது சென்னை டிஜிபி அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு ஐஜியாக பொறுப்பேற்க உள்ளார். ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகப் பணிகளை கவனிக்கும் முக்கியப் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் இந்த பரபரப்பான காலகட்டத்தில், முதல்வர் விஜய் எடுத்துள்ள இந்தத் திடீர் பணியிட மாறுதல்கள் காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த புதிய உத்தரவுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வரும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.