TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தனியார் மயமாகும் இரண்டு முக்கிய வங்கிகள்? மத்திய அரசின் அடுத்தகட்ட திட்டம்!

Share This Article:

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க மத்திய அரசு மீண்டும் ஆலோசனை செய்து வருவது குறித்த சுருக்கமான தகவல்.

தனியார் மயமாகும் இரண்டு முக்கிய வங்கிகள்? மத்திய அரசின் அடுத்தகட்ட திட்டம்!

இந்தியாவில் உள்ள இரண்டு முக்கிய பொதுத்துறை வங்கிகளான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியைத் தனியார்மயமாக்கும் திட்டம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. 2021-22ஆம் ஆண்டு பட்ஜெட்டிலேயே இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. தற்போது வங்கிப் பங்குகளை விற்பது மற்றும் வங்கிகளை ஒருங்கிணைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.இந்த இரண்டு வங்கிகளுடன் யூகோ வங்கி மற்றும் பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியிலும் அரசின் பங்குகளைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. செபி (SEBI) விதிமுறைகளின்படி, இந்த நான்கு வங்கிகளிலும் அரசின் பங்கை 75 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் பொதுப் பங்கு விற்பனை (OFS) மூலம் இந்தப் பங்குகள் சந்தையில் விற்கப்பட வாய்ப்புள்ளது.

Content image

நிதி ஆயோக் அமைப்பும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளைத் தனியார்மயமாக்கப் பரிந்துரைத்துள்ளது. எதிர்காலத்தில் மூன்று அல்லது நான்கு பெரிய அரசு வங்கிகள் மட்டுமே இயங்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நீண்டகாலத் திட்டமாக உள்ளது. இதன் மூலம் வங்கித்துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர அரசு நினைக்கிறது.

இருப்பினும், இந்த வங்கிகளைத் தனியார்மயமாக்குவது குறித்து எந்த இறுதி முடிவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கையைச் செயல்படுத்த நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தங்களும் கொண்டுவரப்பட வேண்டும். எனவே, தற்போதைய நிலையில் இது தொடர்பான ஆலோசனைகள் மட்டுமே நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions