டிரம்பை சிறையில் அடைத்தது போன்ற காட்சி: தெஹ்ரானில் பரபரப்பு!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்று வேடமிட்ட ஒருவரை சிறையில் அடைத்தது போல் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வு குறித்த முழுமையான செய்தி.
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்த சூழலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தஜ்ரிஷ் சதுக்கத்தில் ஒரு சிறைச்சாலை போன்ற கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அந்த கூண்டிற்குள் அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்று வேடமிட்ட ஒரு நபர் அடைக்கப்பட்டுள்ளார். அவர் டிரம்பின் முகமூடி மற்றும் விக் அணிந்து சிறைக்கம்பிகளுக்கு பின்னால் நிற்கிறார். மேலும், அந்த கூண்டில் படுக்கை, கழிப்பறை மற்றும் கைகழுவும் தொட்டி போன்ற வசதிகளும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.
சிறைக்குள் இருக்கும் அந்த நபர் சில நேரங்களில் படுத்து உறங்குவது போலவும் நடிக்கிறார். பொதுமக்கள் இந்த காட்சியை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். பலர் தங்களது செல்போன்களில் இதனை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர்.இந்த கூண்டின் பின்னால் ஒரு பெரிய மின்னணு விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த மாதம் தெற்கு ஈரானில் நடந்த ஒரு திருமண விழாவின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் தொடர்பான காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன

0 Comments
No comments yet. Be the first to comment.