ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஷ் சற்றுமுன் அதிரடி கைது
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டிடிசிபி உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் அன்பில் மகேஷ், தனியார் பள்ளி சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே அன்பில் மகேஷ் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அன்பில் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன் முன்ஜாமீன் மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்ததையடுத்து, அன்பில் மகேஷ் சற்றுமுன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். வழக்கின் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால் போலீஸ் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிமன்றம் முன்ஜாமீனை நிராகரித்த நிலையில், அவர் தற்போது போலீஸ் காவலில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்

0 Comments
No comments yet. Be the first to comment.